1. கடிகை முத்துப் புலவரின் மாணவர் யார்?
2. பேராசிரியர். பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் யாரை ஞானாசிரியராகக் கொண்டு ஒழுகி வந்தார்?
3. 'நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்'
என்று முழக்கமிட்டவர்
4. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்?
5. 'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படுபவர் யார்?
6. 'புரட்சி முழக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார்?
7. முற்காலத்து இசைத் தமிழ் நூல்களில் ஒன்று எது?
8. பம்மல் சம்பந்த முதலியார் முதன் முதலாக எழுதி நடித்த நாடகத்தின் பெயர் என்ன?
9. இயற்பெயர் கண்டறிக
(a) பாரதியார் 1. ராஜ கோபாலன்
(b) பாரதிதாசன் 2. அரங்கசாமி
(c) சுரதா 3. சுப்புரத்தினம்
(d) வாணிதாசன் 4. சுப்பிரமணியன்
(a) (b) (c) (d)
10. 'மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்' என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?